மேலூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆட்டுக்குளம் விலக்கு பகுதியில் கூத்தப்பன் என்பவரின் பெட்டிக் கடையை உடைத்து 5 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். அருகிலிருந்த மீனாட்சி சுந்தரம் உணவகம் மற்றும் வல்லவன் ஆகியோரின் கடைகளின் மேற்கூறைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் அருகிலிருந்த மற்றோரு கடையை உடைக்க முற்பட்ட போது சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால், மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொள்ளை அடித்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post