சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் வயல்வெளிகள், கண்மாய், குளம் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்றும் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post