கரூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம் முதல்கட்ட பணியை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
கரூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பாணியில் பசுமை இயக்க இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது சொந்த ஊரான ஆண்டான்கோவில் பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து இளைஞர்களை ஊக்குவித்தார். வேப்பமரம், புங்க மரம், பனைமரம், புளியமரம், மாமரம், போன்ற மரங்கள் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாதுகாக்க மர கன்று பராமரிப்பு குழு என ஒரு குழு அமைத்து, அவர்கள் தினமும் காலை மாலை என இருவேளையும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வளர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். இந்தநிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகள் வைத்தனர்.
Discussion about this post