ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் தற்காலிக மண்சாலையை ஆற்றுநீர் அடித்து செல்லப்பட்டதால் கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளியில் கோதண்டராமர் சிலை தொடர்ந்து மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை 380 டன் எடை கொண்டதால் பாலத்தின் மீது செல்ல நெடுஞ்சாலை துறையினர் அனுமதி மறுத்தனர். எனவே, ஆற்றின் குறுக்கே மண்ணை குவித்து தற்காலிக சாலையை ஏற்படுத்தி செல்ல சிலை நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டனர். இந்தநிலையில், சிலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளிற்கு ஏற்ப கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தெண்பண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஓசூர் பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, 195 கன அடிநீர் தெண்பண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. சாலை அமைக்கும் பணி ஏறக்குறைய 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வந்த நீரால், தற்காலிக மண்சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஆற்றைக் கடப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
Discussion about this post