ராஜஸ்தான் மாநிலத்தில, ஜிகா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து, அறிக்கை அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. 22 பேர் ஜிகா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குவைப் போன்று காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஏற்படுத்துதல் ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்கா விட்டால், மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் முதன்முதலாக 2017ம் ஆண்டு அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து ராஜஸ்தான் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.