பெட்ரோல் டீசலின் விலை வழக்கம்போல் இன்றும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த இரண்டு மாதங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எரிபொருட்களின் விலை உயர்வால் சரக்கு லாரி வாடகையும் உயர்ந்துள்ளது, இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியில் 2 ரூபாய் 50 காசுகளை குறைத்தது. இருப்பினும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 73 காசுகளாக உள்ளது. டீசல் விலை 39 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 29 காசுகளாக உள்ளது.