தமிழகத்தில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மாலையில் மீண்டும் கூடியதும், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி பேசினார். அவருக்கு பதிலளித்த முதலமைச்சர், கனமழையால் விளைச்சல் பாதித்ததே வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்றார். தற்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வருவதாக முதலமைச்சர் கூறினார்.
மேலும் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் மற்றும் தானிய வகைகளை கண்டுபிடிக்க கோவை வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post