மக்களவை தேர்தலை முன்னிட்டு மோடியால் சாத்தியப்படும் என்ற வாசகத்தை பாஜக தேர்வு செய்துள்ளது
இந்த தகவலை மத்திய நிதி அமைச்சரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசார குழுவின் தலைவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது, மோடி கடந்த 5 ஆண்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றி உள்ளார். விரைவாக புரிந்து கொள்ளக்கூடிய அவர், சிக்கலான பிரச்சினைகளில் விரைவாக முடிவெடுத்துள்ளார் என்றார். செயல்படக்கூடியவர் என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், எனவே தான் ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்
Discussion about this post