மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கொள்கை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மொடக்குறிச்சியில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..? என்று அதிமுக உறுப்பினர் சிவசுப்பிரமணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில், மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்றத்திற்கு அளிக்கும் பரிந்துரையின் பேரில் புதிய நீதிமன்றம் உருவாக்கப்படும் என்றார். 51 நீதிமன்றங்களை 3 கட்டங்களாக திறக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இதுவரை 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், நாட்டிலேயே நீதித்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Discussion about this post