ATM யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்த போலீசார்

பெரம்பலூரில் ஏ.டி.எம்.ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பெரம்பலூர், திருச்சி சாலையில் வெங்கடேசபுரம் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ATMயை உடைத்து நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலில்படி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கண்ணன் அங்கு வந்துள்ளார். அப்போது, அவரை தாக்கிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றார். பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை துரத்திச் சென்று பிடித்து சரமாரியாக தாக்கினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் தனுஷ் என்பது அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் தனுஷ் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version