மதுரையில் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, போலீ்ஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், ஜூலை 21ஆம் தேதி முதல், அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறி, பக்ருதீனின் தாய் சையது மீரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், அவரை சந்திக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விமலா, நீதிபதி ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பதிலளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: உயர் நீதிமன்றம்தனிமைச் சிறைபோலீஸ் பக்ருதீன்
Related Content
போட்டித்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கூடாது : உயர் நீதிமன்றம்
By
Web Team
February 1, 2019
விதிமீறல் கட்டிடங்களில் குடிநீர்,மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
By
Web Team
December 29, 2018
ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்
By
Web Team
December 20, 2018
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் - அரசு தலைமை வழக்கறிஞர் சம்மன்
By
Web Team
September 19, 2018
மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
By
Web Team
September 2, 2018