மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு, கடல் எல்லைகளை கண்டறியும் வகையில், மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகளை ஏன் வழங்க கூடாது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version