சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு!
காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் கொலை குற்றங்கள், கற்பழிப்புகள் குறைந்துள்ளது மற்றும் பாலியல் தொல்லை இல்லை என்கிற பச்சைப்பொய்யை ஸ்டாலின் சட்டமனறத்திலேயே சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் நாள்தோறும் குடும்பத்துடன் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிப்பு, பள்ளிச்சிறுமிகள் கற்பழிப்பு என்று பல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ,மேலும் கடந்த மாதம் ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வந்துள்ளார் ஸ்டாலின். அவர் வந்த நாட்களில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஜானகிபுரத்தில் வடமாநிலத் தொழிலாளர் மற்றூம் இசுலாமிய சமுக்கத்தை சேர்ந்த ஐஸ் விக்கும் ஊழியரின் மகளை நான்கு சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்து பதிவும் செய்துள்ளார்கள்.
இச்சம்பவத்திற்கு அச்சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கூட்டுப்பாலியல் பலாத்காரம் நடைபெற்ற அன்று ஸ்டாலின் அப்போது விழுப்புரத்தில் இருந்திருக்கிறார். இச்செய்தி தாமதமாக வெளிவந்த நிலையில் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறார் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தாமதம். ஏன் குற்ற சம்பவங்களை உடனுக்குடன் உளவுத்துறை ஸ்டாலினிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இந்த சம்பவம் தெரிந்தும் முதல்வர் கண்டுகாணாமல் இருந்தாரா? யார் இதற்கு பொறுப்பு. இப்படி கேள்விகள் எழ, விழுப்புரத்தை ஆய்வு செய்ய வருகிறாராம் ஸ்டாலின். அவர் ஆய்வு செய்த லட்சணம் இதுதான். இதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது. சட்டமன்றத்தில் வீராப்பாக பேசினால் மட்டும் போதாது. செயலிலும் வீராப்பு வேண்டும்.
இப்படியே போனால் தமிழகத்தின் நிலைமை என்ன. தினந்தோறும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் இன்னும் வழக்கு பதிவு சரியாக பதியப்படவில்லை. கருணாநிதியை விட நாங்கள் சாதித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். என்ன சாதித்து விட்டார்கள், நந்தான் அறிவாளி என்று சொல்லும் நிதியமைச்சர், அவர் பேசியதாக வெளிவரும் ஆடியோக்கள் கருணாநிதியைவிட உதயநிதியும் சபரீசனும் 30 அயிரம் கோடி பணம் சேமித்துள்ளார்கள். இதை எதிர்க்கட்சி சொன்னால் பொய் என்று சொல்வார்கள். ஆனால் இதனைக் கூறியதே நிதி அமைச்சர். ஏன் இந்தக் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் இது பொய் என்று சொல்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் அதற்கு ஏன் நிதியமைச்சர் வழக்கு தொடுக்கவில்லை.
சிவி சண்முகம் அவர்கள் பேசிய முழு காணொளி கீழுள்ள சுட்டியில் உள்ளது.