தேனி மாவட்டத்தில், கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில், கொலையாளியை கைது செய்த காவல்துறையினரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் சக்கம்பட்டியை சேர்ந்தவர், கூலித் தொழிலாளி பாண்டியன். இவரது மனைவி முத்தம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த சென்றாயப்பெருமாள் என்பவருக்கும், கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் சென்றாயப்பெருமாளையும், முத்தம்மாளையும் பாண்டியன் கண்டித்துள்ளார். இந்நிலையில், குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்த பாண்டியனை, சென்றாயப்பெருமாள் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், 12 மணி நேரத்திற்குள் சென்றாயப்பெருமாளை கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த காவல்துறையினரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post