மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மெரினாவில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடம் அருகிலேயே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவ்விடத்தில் நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், அங்கு நினைவிடம் அமைக்க தடை கோரி, ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதை தடை செய்யும் விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.