செங்கத்தில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கத்திரி வெயில் முடிவடைந்தும் தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசி வருவகிறது .இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்ததுடன், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இந்த மழை நீரில் சிறுவர்கள் காகிதக் கப்பல் விட்டு மகிழ்ந்தனர். மேலும், திடீர் மழையால் குளிர்காற்று வீசி வருவதால், வெப்பம் தணிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Discussion about this post