நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள ஊசிமலை காட்சி முனை பகுதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.
கோடை காலம் துவங்கியுள்ளநிலையில், நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளா, கர்நாடகாவிலிருந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள இயற்கை அழகினை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் ஊசிமலை காட்சி முனை பகுதி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த காட்சி முனையில் இருந்து முதுமலை பள்ளத்தாக்கு, கூடலூர் பள்ளத்தாக்கு மற்றும் தவளை மலை உளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். யானை, கடமான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளையும் காண முடியும். இதனால் ஊசி மலை காட்சி முனைக்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
Discussion about this post