இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 190ஆக உயர்வு

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டுகள் வெடித்த நிலையில், தற்போது 7வது ஒரு இடத்தில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 190ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்த கொடூர குண்டு வெடிப்பில் பலரது உடல்கள் தூக்கி எரியப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் திருநாளில் நிகழ்ந்துள்ள இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 7வதாக கொழும்பில் உள்ள வன விலங்குகள் சரணாலயம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். நாட்டு மக்கள் ஒற்றுமையின் வலிமையை காட்ட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரம சிங்கே டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version