அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புயலாக மாறினாலும் 16ம் தேதி வலுவிழந்து ஒடிசாவிற்கு செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து 10ம் தேதிக்கு மேல் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Exit mobile version