தமிழக அரசின் அனுமதியின்றி முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணையை கட்டப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு உறுதியளித்துள்ளது.
கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசுக்கு அனுமதி வழங்கியது. கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாற்று அணைகட்டுவதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து தகவல்களை மட்டுமே சேகரித்து வருவதாகவும் புதிய அணை கட்டுவதற்கான பணியில் ஈடுபடவில்லை என்றும் கேரள அரசு தெரிவித்தது. மேலும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் கேரள அரசு முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டாது எனவும் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து தகவல்களை மட்டும் சேகரிக்க உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.