மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பெண்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற விவாதங்களுக்கு பயந்து, பிரதமர் மோடி நிர்மலா சீதாராமனை அனுப்பியிருந்ததாக விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராகுலின் கருத்து பெண்களுக்கு எதிரான அவருடைய நிலைப்பாட்டை காட்டுவதாக தெரிவித்திருக்கும் தேசிய பெண்கள் ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
Discussion about this post