பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்

மதுரையில் பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் பால்பாண்டி, இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், தெற்கு வாசல் பகுதியில் பால்பாண்டி நடந்து சென்றிருந்தபோது பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version