திருமணம் முடிந்த கையோடு, தனது பள்ளிக்கு சொந்த செலவில் வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்த இடைநிலை ஆசிரியரை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த கோழியாளம் கிராமத்தில், அரசு ஆரம்பப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராக விக்னேஸ்வரன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஞாயிறு அன்று அவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. திருமணம் முடிந்த கையோடு தனது பள்ளிக்கு வந்து, கிராம மக்களிடம் ஆசி பெற்றார். பள்ளிக்கு தனது சொந்த ஊதியத்தில் புத்துயிர் அளிக்கும் விதமாக வர்ணம் பூசிய நுழைவாயில் கேட்டை திறப்புவிழா செய்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள இளைஞர்களிடம் 25 ஆயிரம் விதைப்பந்துகளை கொடுத்து கிராமம் முழுக்க அந்த விதை பந்துகளை வீச கோரி அறிவுறுத்தினார். ஆசிரியரின் இந்த பண்பை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Discussion about this post