மெரினா வாசிகளுக்கு எக்காலத்திலும் குடிநீர் பஞ்சமே வருவதில்லை… எப்படி என கேட்கிறீர்களா…
வரலாறு காணாத வறட்சியால் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது. ஆனாலும் தமிழக அரசு திறம்பட செயல்பட்டு, சென்னையின் தாகத்தை தணித்து வருகிறது. தலைநகரின் மற்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்த போதிலும், கடற்கரையோர மக்களுக்கு எப்போதும் அப்பிரச்சினை இருப்பதில்லை.
எப்போதும் மினரல் வாட்டரை போன்ற அருமையான குடிநீர் மேலேயே கிடைக்கிறது. குறிப்பாக மெரினாவில், பார்த்தீர்களென்றால் , ஆங்காங்கே சிறுசிறு பள்ளம் தோண்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். வெறும் 10 அடி ஆழத்திலேயே தூய குடிநீர் அருவி போல ஊற்றெடுக்கிறது. குடிக்க, சமைக்க, குளிக்க அனைத்திற்கும் இந்த தண்ணீரை உபயோகிக்கிறார்கள்.
பள்ளம் தோண்டுவதோடு மட்டுமின்றி, ஆங்காங்கே சிறு சிறு , கைப்பம்புகளை பொருத்தி இருக்கிறார்கள். எவ்வளவு கொடுமையான வறட்சி இருந்தாலும் கடற்கரைகளில் மட்டும் நன்னீருக்கு பஞ்சம் இருப்பதே இல்லை.
மெரினா வியாபாரிகளுக்கும், அங்கே வரும் பொதுமக்கள் பெரும்பாலானோருக்கும் இந்த நீரே தாகம் தீர்க்கிறது..
வங்கக்கடல் சூழ்ந்த உப்பு தண்ணீர் முட்டி நின்றாலும் , அருகிலேயே நன்னீர் சுரப்பது இயற்கையின் அதிசயமே… இறைவன் தந்த பொக்கிஷமே..
Discussion about this post