டிக் டாக் மனு மீது ஏப்ரல் 24-ம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிக்டாக் செயலி தவறாக பயன்படுத்தப்படுவதால், அதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ஏப்ரல் 24-ம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றால், டிக்டாக் மீதான தடையை நீக்கி உத்தரவிட நேரிடும் என தெரிவித்துள்ளது.