கன்னியாகுமரியில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 12 மணியில் இருந்தே மக்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டிருந்தனர். குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி எதுவும் செய்யப்படாததாலும்கடும் வெயிலின் தாக்கத்தாலும் அவதிப்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சியினர்,நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே பாதியிலேயே கலைந்து செல்ல முயன்ற பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Discussion about this post