வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசைநோக்கி நகர்ந்து பானி புயலாக மாறும் என்றும் இந்த புயல் வரும் 30ம் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பானி புயல், கரையை கடக்கும்போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், அப்போது பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version