தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி !

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை தென், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Exit mobile version