கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகாணபள்ளி கிராமத்தில் மஞ்சு விரட்டு கோலாகலமாக நடந்தது. சீறிப் பாய்ந்த காளைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
பெரிய மாரியம்மன் கோவில் அருகே 8 கிராமங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்ற மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. சீறிப் பாய்ந்த காளைகளை, தழுவி வீரர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். மஞ்சு விரட்டு போட்டியை காண, ஏராளமானோர் ஆரவாரத்துடன் குவிந்திருந்தனர். காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். மஞ்சு விரட்டு போட்டியையொட்டி, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Discussion about this post