வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஜனவரி 20ம் தேதி இந்தியா வந்தடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தாமதமாகவும், தொடர்ந்தும் பெய்த பருவ மழையால், வெங்காய பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்நிலையில், மத்திய அரசு கையிருப்பு வைத்துள்ள வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விநியோகம் செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஜனவரி 20ம் தேதி இந்தியாவை வந்தடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post