கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயிகள் மணிலா பயிர் எனப்படும் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயிகள் கடந்த ஐப்பசி மாதத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலையை பயிரிட்டனர். தற்போது, அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி உள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.
இயந்திரங்கள் இல்லாமல் கூலியாட்களை கொண்டு பாரம்பரிய முறையில் அறுவடை செய்வதால், நிலக்கடலை பாழாகாமல் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், நிலக்கடலை நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், ஒரு மூட்டை 5 ஆயிரத்து 500 முதல், 7 ஆயிரத்து 129 ரூபாய் வரை விலைப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், தங்களுக்கு உரிய விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.