உதகை தாவரவியல் பூங்காவிற்கு தேனிலவு வரும் தம்பதிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது சீதோஷநிலை ரம்மியமாக காணப்படுவதால் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான தேனிலவு தம்பதிகள் உதகைக்கு வர தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த தேனிலவு தம்பதிகள் இந்த காலநிலையை காண வருகின்றனர். உறைபனி பொழிவை ரசிப்பதற்கென்றே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். தற்போது பனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. மார்ச் மாதம் முதல் கோடை சீசன் துவங்கிவிடும் என்பதால் உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.