பிளாஸ்டிக் தடையால், வாழையிலை வியாபாரம் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை காரணமாக, பொதுமக்களிடையே மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாழையிலை வியாபாரம் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post