திருமணமான 4 மாதத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர்

சென்னையில், திருமணமான நான்கே மாதத்தில், மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர கணவனை, பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிகரணையை அடுத்த பெரும்பாக்கம் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார், அஞ்சலி தம்பதிக்கு, திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அஞ்சலி தனது உறவினரின் துக்க நிகழ்விற்கு வருமாறு அய்யனாரை அழைத்த போது, அவர் வர மறுத்துவிடவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார், தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலியின் உடலை கைபற்றி, உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அய்யனாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version