ஊரடங்கு காலத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, மின்வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்றும், பொதுமக்கள் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருந்திருக்கும் என தமிழக அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில் விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயித்ததாக அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருந்தால், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post