ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தின் சார்பில் அப்பாஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதே போல், இதே கோரிக்கையை முன்வைத்து அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட மேலும் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருப்பதால், 7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவு செய்யலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தமிழக ஆளுநர் தயக்கம் காட்ட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post