திருவானைக்காவல் கோவிலில் தங்கப் புதையலில் உள்ள நாணயங்கள் சென்னையில் அச்சடித்த தங்க பகோடா வகை நாணயங்கள் என்று நாணயவியல் ஆய்வாளர் சங்கரன் ராமன் தெரிவித்தார்.
திருவானைக்காவல் கோவிலில் கிடைத்த தங்க நாணயப்புதையலில் உள்ள பெரும்பாலானான தங்க நாணயங்களில் முன்புறம் ஒரு நிற்கும் உருவமும், பின்புறம் சில புள்ளிகளும் காணப்பட்டன. இந்த நாணயங்களில் காணப்படும் உருவம் அரசரா? கடவுளா என்பதில் தொடங்கி, இந்த நாணயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதா? அல்லது சில நூறு ஆண்டுகள் முற்பட்டதா? – என்று பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் திருவானைக்காவல் கோவிலில் கிடைத்த நாணயங்கள் ஆங்கிலேயர்கள் சென்னையில் அச்சடித்த தங்க பகோடா அல்லது வராகன் வகைச் சேர்ந்த நாணயம் என்று நாணயவியல் ஆய்வாளர் சங்கரன் ராமன் தெரிவித்துள்ளார். நாணயத்தில் காணப்படும் நிற்கும் உருவம் விஷ்ணுவின் உருவம் என்றும் இந்த வகை நாணயங்கள் கி.பி.1678ஆம் ஆண்டு முதல் 1740ஆம் ஆண்டுவரை சென்னையில் அச்சடிக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post