காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலை, புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தயாரிக்கப்படும் கண்டாங்கி சேலை உலக பிரசித்தி பெற்றதாகும். 200 ஆண்டு காலமாக காரைக்குடி கைத்தறி நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவாகும் இந்த சேலைகள் தரமானதாகவும், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் சேலையாக உள்ளது. இந்த நிலையில், கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு, காரைக்குடி நெசவாளர்கள், சென்னை கிண்டியில் உள்ள புவிசார் குறியீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். புவிசார் குறியீடு பெற தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அப்பகுதி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post