வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் 45 கோடியே 61 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டினார். விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வீரமணி, கட்டுமான பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
Discussion about this post