கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையொட்டி விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்
தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரம் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்தது. மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் இந்த நாட்களில் மீனவர்களால் வீசப்படும் வலைகளால் மீன்குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடித் தடைக்காலம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தடைக்காலம் நிறைவடைந்தையொட்டி விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க நள்ளிரவில் கடலுக்குள் சென்றுள்ளனர். புறப்படும் முன்னர் இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும், மீன்வளம் பெருகவும் பூஜைகள் நடத்தி கடலுக்குள் சென்றனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே படகுகள் மற்றும் வலைகள் பழுது நீக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. 60 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்
Discussion about this post