ராமேஸ்வரம் அருகே கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், கடந்த 4 தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீன்பிடித்தடைக்காலம் அமலில் உள்ளநிலையில், நாட்டுப் படகுகள் மூலம் சென்று மீன்பிடித்து வந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே ராமேஸ்வரம் அருகே ஓலைகுடா, பிசாசுமுனை, அக்னி தீர்த்தம், சங்குமுனை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை, கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், தரை தட்டியும் கரையில் ஒதுங்கி காணப்படுகின்றன. ராமேஸ்வரம் பகுதியில் கடல் உள்வாங்கியதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Discussion about this post