மாட்டுக்கு தீவனத்தை மட்டும் வைத்து விட்டு பின்னர் பால் கறந்து கொண்ட பிறகு மறந்து விடுபவர்கள் மத்தியில், மாட்டுக்கு சீமந்தம் நடத்தி அனைவரையும்ஆச்சரியப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்டரன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் வளர்த்து வரும் மாடு இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால்,அதற்கு”ஒன் மேன் ஆர்மி” என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு கர்ப்பம் அடைந்தது. இதனையடுத்து குமார் தனது மாட்டிற்கு மனிதர்களைப்போல ஊரை அழைத்து சீமந்தம் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கு பெற்றோர் தயங்கிய நிலையில், அவர்களை சமாதானப்படுத்திய குமார் வீடுவீடாகச் சென்று அழைப்பு விடுத்துள்ளார். முதலில் ஆச்சர்யப்பட்டு விமர்சித்த மக்கள்,பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து மேளதாளங்களுடன் மாட்டை ஊர்வலமாக அழைத்து வந்து சீமந்தம் நடத்தப்பட்டது.
Discussion about this post