பங்கு சந்தைகள் கடந்த ஒரு மாதமாக கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் சூழலில் மத்திய அரசு புதிதாக தங்க பத்திரங்களை வெளியிடுகிறது. அக்டோபர் 19 ம் தேதி வரை இதன் விற்பனை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,146ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. வங்கிகள், பங்கு விற்பனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலமாக தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
அதே நேரம் டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில்,தங்கப் பத்திரங்களை ஆன்லைனில் வாங்கினால் ரூ.50 தள்ளுபடி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.