2019 -2020 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாகிறது

இடைக்கால பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், சில முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளநிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்செய்யப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சைக்கு சென்றதால், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஏப்ரல் – மே மாதங்களில், மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வேளாண்துறை தொடர்பான அறிவிப்புகள், விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் ரத்து உள்ளிட்ட சலுகைகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் மீதான வரி குறைப்பு, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை உயர்த்துதல், நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு வருமான வரிச் சலுகை உள்ளிட்ட அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version