ரூ.2000 நோட்டு அச்சிடும் பணி 2019ம் ஆண்டே நிறுத்தியாச்சுப்பா…!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை, கடந்த 2019ம் ஆண்டே நிறுத்தி விட்டதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் 2வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் ஹுசைன், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்டதா?, மேலும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை நிறுத்தக்கூடிய திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். கடந்த 2019-2020 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் திட்டம் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை எனவும் எழுத்துப்பூர்வமாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.

Exit mobile version