கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தெதி நெட்ப்ளிக்ஸ் வெளியீடாக வந்த ஆவணக் குறும்படம் தான் “த எலிபெண்ட விஷ்பெரெர்ஸ்”. யானையைப் பற்றியும் யானைப் பாகன்கள் பற்றியுமான முக்கியமான குறும்படமாக இது இருந்தது. கார்திகி கோன்சால்வேஸ் இயக்கிய இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. பொம்மன் மற்றும் பெல்லி எனும் கணவன் மனைவி இருவர் தமிழ்நாட்டின் முதுமலையில் யானைக்குட்டி ஒன்றினை ரகு என்கிற பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மனிதர்களுக்கும் விலங்கிற்கும் இடையே பிணைப்பினைக் காட்டும் காவியமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.
ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஆவணக் குறும்படப் பட்டியலில் இடம் பிடித்திருந்த இத்திரைப்படம் தற்போது விருதினைப் பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அளவிற்கு பெருமை அளிக்கக் கூடிய பெருமையாக கருதப்படுகிறது. இந்தத் திரைப்படத்தினை தயாரித்தவர் குனித் மோங்கா. இது இவர் பெரும் இரண்டாவது ஆஸ்கார் விருது ஆகும். முதன்முதலாக “பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” என்கிற திரைப்படத்திற்காக 2019ல் ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கிறார்.