உதகையில் வனக்காவலர்கள் ரோந்து சென்ற போது, பிரமாண்ட யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் தாக்க வந்த வீடியோ காட்சி நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வன காவலர்கள் வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது, யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் பிளிறிக்கொண்டு காரை நோக்கி ஓடி வருவதை பார்த்த வனக்காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இந்த, சூழ்நிலையில், வேறு யாராக இருந்தாலும் உயிர் பிழைத்தால் போதும் டா சாமி என்று தலைத்தெறிக்க ஓடி விடுவார்கள். ஆனால், ரோந்து சென்ற வனக்காவலர்கள் அந்த நேரத்தில் யானை என்ன செய்யும் என்று நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். பதற்றம் எதுவும் அடையாமல், காரை பின்னோக்கி நகர்த்தாமலும், கீழே இறங்காமலும் காரில் உட்கார்ந்தப்படி ஒலியை மட்டும் எழுப்பி யானையை சாதுர்த்தியமாக நிறுத்தினர்.
இதனால் பாய்ந்து வந்த யானை திடீரென நின்று, பின்னர் பின்வாங்கியது. இதனால் அதிர்ச்சியும், பரவசமும் ஒருங்கே ஏற்பட்டது.