அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவுக்கு எதிரான நான்கு வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவு நகலை நாளை தாக்க செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். ஆனால் சசிகலாவின் வழக்கறிஞர் தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், அன்னிய செலாவணி வழக்கு விசாரணையை மேலும் தள்ளி வைக்க கோரியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி மலர்மதி, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், காலதாமதம் செய்ய முயல்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.
Discussion about this post