கரூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. ஊராட்சிப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றிய நிலையிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத 25 ஊராட்சிகளிலுள்ள 93 குக்கிராமங்களுக்கும் 50 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு குடிநீர் வழங்க நடைபெற்று வரும் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். மேலும் பொது மக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார்.