ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடிபோதையில் வந்த திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி அராஜகத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. திமுகவை சேர்ந்த பிரமுகர் வாக்குச்சாவடி மையத்திற்கு குடிபோதையில் சென்று வாக்காளர்கள் மத்தியில் கள்ள ஓட்டுக்கள் போடுவதாக கூறி புரளியை கிளப்பினார். இதையடுத்து, திமுக சேர்ந்த மற்றோருவர் வாக்குச் சாவடியில் இருந்த மற்றவர்களை பார்த்து கள்ள ஓட்டு போடுகிறீர்களா எனக் கேட்டு வாக்குவாதம் செய்ததோடு அராஜகத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்
Discussion about this post